சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டு 3 லோடு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாகவும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
