தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் (LTMC) சிங்கப்பூரின் Kreate Design Pte உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஆண்டுக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை LTMC உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட புதுப்பித்தல் மற்றும் உள்துறை வடிவமைப்பு நிறுவனம் 44 ஆயிரம் சதுர அடி கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் கோபுர தளத்தின் ஒரு தளத்தை குத்தகைக்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இந்த முதலீடு அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக அமையும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sayanthiny Kanthasamy