திருப்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதள முன்பதிவு வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.
இதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement