"இந்த வெற்றியை ரசித்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகுங்கள்!" சவுதி அரேபியா பயிற்சியாளர் அறிவுரை

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணி  கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜெண்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸிடம் ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத்.

இதனால் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால்  சவுதி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை வகித்து அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரசு இன்று தேசிய விடுமுறையும் அறிவித்திருந்தது.

Herve Renard

இந்நிலையில் சவுதி அரேபிய அணியின் பயிற்சியாளர், ஹெர் ரெனார்ட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இரண்டாவது பாதியில் 2 கோல்களை நாங்கள் விட்டுக்கொடுத்திருந்தால் எங்களது ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். முதல் பாதியில் எங்களது அணி விளையாடும் போது நான் மகிழ்ச்சியாக இல்லை. பின் Saleh Al Shehri மற்றும்  Salem Al Dawsari கோல் அடித்து ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றினார்கள். ஆனால் அர்ஜெண்டினா இன்னும் ஒரு அற்புதமான அணி என்பதை மறந்துவிடாதீர்கள்.

அவர்கள் 36 ஆட்டங்களில் தோல்வியடையாமல் இங்கு வந்துள்ளனர். அவர்களிடம் அற்புதமான வீரர்கள் உள்ளனர். நாம்  சவுதி அரேபியாவுக்காக வரலாறு படைத்தோம். இது என்றென்றும் நிலைத்திருக்கும். இருப்பினும் நாம் முன்னேறுவது பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அப்போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாம் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறாமல் கூடப்போகலாம். எனவே இந்தப் போட்டியை ரசித்துவிட்டு விரைந்து இரண்டாவது ஆட்டத்திற்குத் தயாராகுங்கள்” என்று பேசியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.