புதுடில்லி, :புதுடில்லியில் காதலியை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய அப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா, தன் காதலி ஷ்ரத்தாவுடன் புதுடில்லியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.
காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, உடலை ௩௫ துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசினார்.
இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் அப்தாபுக்கு வழங்கப்பட்ட ஐந்து நாள் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் புதுடில்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது அப்தாப் கூறுகையில், ”காதலியுடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால், கடும் கோபம் அடைந்து, அவரை கொலை செய்து விட்டேன். போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்,” என்றார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை, அப்தாப் எங்கெங்கு வீசி எறிந்தார் என்பதை அவரால் சரியாக சொல்ல முடியவில்லை. ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினோம்’ என்றார்.
இதையடுத்து, அப்தாபின் போலீஸ் காவலை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்த நீதிபதி, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அனுமதி அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement