பெரும்பாலும் விமானங்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவசியமான காரணங்களும், அவசர காரணங்களுக்கும் பயன்படுத்துவதுதான் அதிகம். எனவே விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நேரம் மிகவும் முக்கியமான ஒன்று.

அந்த வகையில் சிவில் ஏவியேஷன் உள்நாட்டு விமான சேவைகளின் நேர மேலாண்மையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் செயல்பட்டுவரும் உள்நாட்டு விமான சேவைகளை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன் அடிப்படையில் விமான சேவை நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் நேர மேலாண்மையில் முதல் இடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. இரண்டாம் இடத்தில் விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் உள்ளன. கடைசி இடத்தில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் உள்ளது.

மேலும் நடப்பாண்டில் உள்நாட்டு விமானங்களில் 9.88 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் விமானப் போக்குவரத்து துறை 59.16 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறைந்த விலை விமான சேவையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 7.3 சதவிகித பங்களிப்பை தக்கவைத்திருக்கிறது. ஏர் இந்தியாவை சமீபத்தில் மத்திய அரசிடமிருந்து டாடா சன்ஸ் குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.