பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையின் காரணமாக சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜே சிரியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தார்.
பாராளுமன்ற அலுவல்கள் இன்று (23)காலை ஆரம்பமானதை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார்.
இதன்போது அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி நிமல் லான்சவை தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது சபாநாயகர் விஜேயசிரியை சபையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவிக்கையில், சபாநாயகர் அவர்களே உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக எனது கருத்துக்களை முன்வைத்தேன். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இந்த பாராளுமன்றத்தில் சண்டை இடுவதற்கு முயற்சிக்கிறார்.அவரை என்னால் தாக்க முடியும். இருப்பினும் அந்த நிலைக்கு நான் செல்லவில்லை. பாராளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதினாலேயே ஆகும். இதனால் என்னை தாக்க முயற்சித்தோருக்கு எதிராக பாராளுமன்ற சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்படும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.