திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம்! கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்… இது 2வது முறை!


கனடாவில் தமிழருக்கு ஏற்கனவே லொட்டரில் ஒரு கணிசமான பரிசு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

ஒன்றாறியோவின் மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 (ரூ. 67,79,981.86) பரிசு விழுந்தது.

லொட்டரி விளையாட்டு என்றால் விடாமுயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவை என்ற நிலையில் தொடர்ந்து அதில் பாலதாசன் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து இரண்டாம் முறையாக அவருக்கு $100,000 (ரூ. 2,71,23,546.25) பரிசு விழுந்துள்ளது.

பாலதாசன் பாலசுப்ரமணியம்

Balathasan Balasubramaniyam/OLG

பெரிய வெற்றியாளர்

பாலதாசன் கூறுகையில், பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் எண்களின் தொகுப்பை வைத்து தான் லொட்டரி விளையாடுகிறேன்.

தற்போது எனக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோரில் சென்று பார்த்த போது திரையில் ”பெரிய வெற்றியாளர்” என காட்டப்பட்டது.
அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும், மிகுந்த மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது.

உடனடியாக வீட்டிற்கு சென்று என் மனைவி மற்றும் மகனிடம் தகவலை கூற, அவர்கள் உற்சாகமடைந்தனர் என கூறியுள்ளார்.
பரிசு பணத்தை வைத்து முதலில் தனது வீட்டை புதுப்பிக்க பாலதாசன் திட்டமிட்டுள்ளார். 

திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம்! கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்... இது 2வது முறை! | Canada Man Won Another Big Lottery Money

olg.ca | OLG



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.