பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பதாக விமர்சித்தார்.
அதிமுகவை கைப்பற்ற யுத்தம் நடப்பதாகவும், அது தனக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறிய அமைச்சர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை ஆகிய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
ஆன்லைன் ரம்மி சட்டம் குறித்து ஆளுநரை சந்திக்க, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை ஆளுநர் நேரம் தரவில்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
newstm.in