லவ் டுடே கலெக்ஷன்: கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த படத்தில் ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். மேலும் இந்த படத்தின் மொத்தப் பட்ஜெட் 6 கோடி ஆகும்.
இதனிடையே முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இதுவரை ஷேர் தொகையாக மட்டும் 27 கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது.
லவ் டுடே வசூல் நிலவரம் – நாள் வாரியாக
| நாள் | கர்நாடகா | APTG | தமிழ்நாடு | கேரளா | இந்தியாவின் மற்ற பகுதிகள் | வசூல் நிலவரம் |
| நாள் 1 | ₹ 0.1 கோடி | ₹ 0 கோடி | ₹ 2.7 கோடி | ₹ 0.05 கோடி | ₹ 0 கோடி | ₹ 2.85 கோடி |
| நாள் 2 | ₹ 0.3 கோடி | ₹ 0 கோடி | ₹ 4.45 கோடி | ₹ 0.05 கோடி | ₹ 0 கோடி | ₹ 4.8 கோடி |
| நாள் 3 | ₹ 0.45 கோடி | ₹ 0 கோடி | ₹ 5.4 கோடி | ₹ 0.05 கோடி | ₹ 0 கோடி | ₹ 5.9 கோடி |
| நாள் 4 | ₹ 0.17 கோடி | ₹ 0 கோடி | ₹ 2.8 கோடி | ₹ 0.05 கோடி | ₹ 0 கோடி | ₹ 3.02 கோடி |
| மொத்தம் | ₹ 1.02 கோடி | ₹ 0 கோடி | ₹ 15.35 கோடி | ₹ 0.2 கோடி | ₹ 0 கோடி | ₹ 16.57 கோடி |