2001-02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணாக்கர்கள் தேர்வு எழுத அனுமதி! அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை  வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை அரியர் உள்ளவர்கள், அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என அறிவித்து உள்ளது.

பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2001- 2002 கல்வியாண்டில் இருந்து அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் வரும் டிசம்பரில் செமஸ்டர் தேர்வு எழுதலாம். நடப்பு கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் – ஜனவரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஆண்டுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்க உள்ளது.

அதன்படி, 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2001- 02 கல்வியாண்டு முதல் தற்போது வரை எந்த ஆண்டில் அரியர் இருந்தாலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரியர் எழுதவுள்ள மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்தி, www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியர் தேர்வு எழுத நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.