5 கொலைகள் செய்த நபருக்கு திரிபுராவில் துாக்கு தண்டனை| Dinamalar

அகர்தலா, திரிபுராவில், ஐந்து பேரை கொலை செய்தவருக்கு, நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மானிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு,ஹோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி பிரதீப் தேப்ராய், 40, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தன் இரண்டு மகள்களை கம்பியால் அடித்து கொலை செய்தார். பின், அங்கு வந்த தன் சகோதரரையும் கொலை செய்தார். அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அவர், சாலையில் சென்ற இருவரை கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பிரதீபை கைது செய்ய முற்பட்டபோது, இன்ஸ்பெக்டர் சத்யஜித் மாலிக் என்பவரையும் அவர் தாக்கியுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, போலீசார் ஒருவழியாக பிரதீபை கைது செய்து சிறையில்அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில், முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்பட்ட இவரை, டாக்டர்கள் பரிசோதித்து, மனநலம் சரியாக இருப்பதாக சான்றிதழ் வழங்கினர்.
இதையடுத்து மாவட்ட நீதிபதி சங்கரி தாஸ், நேற்று இந்த வழக்கில் பிரதீப் தேப்ராய்க்கு துாக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.