500 கிலோ கஞ்சாவை தின்று ஏப்பம் விட்ட எலிகள் – போலீஸ் வினோத விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் கிடங்கில், 500 கிலோவிற்கு அதிகமான கஞ்சா பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, போதை மருத்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 586 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, ஒரு வழக்கில் 386 கிலோ  கஞ்சாவையும், மற்றொரு வழக்கில் 195 கிலோ கஞ்சாவையும் என மொத்தம் 586 கிலோ ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையம் பறிமுதல் செய்துள்ளது. 

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காவல் துறையினர் வினோதமான வகையில் பதிலளித்திருந்தனர். அதில்,”எலி தொல்லை இல்லாத இடமே அந்த காவல் நிலையத்தில் இல்லை என கூறலாம். மேலும், அவை நாசம் செய்து மிச்சமிருந்த பெரிய கஞ்சா பொட்டலங்களை அதிகாரிகள் அழித்துவிட்டனர்” என வழக்கு விசாரணையில் போலீஸ் தரப்பிலான வழக்கறிஞர் தெரிவித்தார். 

மேலும், 500 கிலோவுக்கு அதிகமான கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டன என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய போலீஸ் தரப்பு வழக்கறிஞர்,”உருவத்தில் சின்னதாக இருந்தாலும், எலிகளுக்கு போலீஸ் என்ற சுத்தமாக பயமே இல்லை. போலீசாராலும் எலித்தொல்லையை தீர்க்க முடியவில்லை” என்றார். 

அதாவது, நவ. 18ஆம் தேதியிட்ட உத்தரவவில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது,”நெடுஞ்சாலை காவல் நிலையத்திற்கு கீழ் வரும் வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த எலிகளை ஒழிக்கவும், 581 கிலோ கஞ்சாவை எலிகள் உட்கொண்டதற்கான ஆதாரத்தையும் சமர்பிக்க வேண்டும் என மதுரா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் நவ. 26ஆம் தேதிக்குள் அதற்கான ஆதாரத்தை சமர்பிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.