சசிகுமாரின் காரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

இயக்குனராக அறிமுகமான சசிகுமார் கிராமத்துக் கதைகள் என்றால் நான்தான் நாயகன் என்று நினைவில் கொள்ளும்படி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.  கடந்த வாரம் சசிகுமார் நடிப்பில் உருவான நான் மிருகமாய் மாற படம் வெளியானதை தொடர்ந்து இந்த வாரம் காரி என்கிற படம் வெளியாகி உள்ளது.  ஹேமந்த் இந்த படத்தை இயக்க சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இமான் காரி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் தொடக்கத்தில் ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை அரசாங்கம் குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம் சென்னையில் சசிகுமார் மற்றும் அவரது அப்பா நரேன் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன்.  இந்த மூன்று கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது, பின்பு என்ன ஆனது என்பதே காரி படத்தின் கதை.  சசிகுமாருக்கு என்று எழுதப்பட்ட கதையாக காரி படம் உள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்த சசிகுமார்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை கச்சிதமாகவும் பயன்படுத்தி உள்ளார்.  நகைச்சுவைக்கு இடமில்லாத இந்த கதாபாத்திரத்தில் எமோஷனை அள்ளிக் கொடுத்துள்ளார்.

காரி படத்தில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது, குறிப்பாக காளை மாடை வைத்து வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. கிளைமாக்ஸ்ல் வரும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான சீன்களும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான பேட்டைக்காலி வெப் சீரிசை அதிகம் நினைவு படுத்தியது காரி.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்த இந்த கதையில் பார்வதி அருண் சிறப்பாகவே நடித்திருந்தார், அவருடைய அப்பாவாக பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துள்ளார்.

kaari

மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த்.  இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  வசனங்கள் காரி படத்தில் புதுமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டிருந்தது.  பெரிதாக தொய்வில்லாத திரைக்கதையில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அவை படத்திற்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை.  காரி – தலைவன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.