சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஜூலை மாதம் இரண்டாம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தொடர்பான போலிச் செய்தி வெளியாகி இருப்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதிப் படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தி வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி, இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த போலிப் பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரிய வந்துள்ளதாகவும், இதனை தேர்வு எழுதியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

“இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்” என்று எச்சரிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சமூக ஊடகங்களில் பரவும் TNPSC ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகளை நம்ப வேண்டாம். இதை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC வெளியீடு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு ஆணையத்தின் அனைத்து தேர்வுகள் தொடர்பான முடிவுகளும், டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் அதனை என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2-7-2022 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இப்படி பரப்பப்படும் போலியான தகவல்களை நம்பி இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.