பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 6 பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நாளை, அதாவது சனிக்கிழமை நடைபெறும் சூட்டிங்கில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள். அதன்படி, எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் இதுவரை குறைந்த வாக்குகளை பெற்றுள்ளனர். இவர்கள் இருவரின் யாரேனும் ஒருவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இருவருக்கும் நெருக்கமாக இருப்பவர்கள் வெளியில் அவர்களுக்காக ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய அண்ணன் மணிகண்டன் இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸ் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு வாக்களிக்க வேண்டி ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த வேண்டுகோளுக்கு ரசிகர்கள் செவிசாய்ப்பார்களா? இல்லையா? என்பது இன்னும் ஒரே நாளில் தெரிந்துவிடும். ரசிகர்களை பொறுத்தவரை நன்றாக விளையாடாத போட்டியாளர்களுக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். அந்தவகையில் அசல்கோளார், விஜே மகேஷ்வரி உள்ளிட்ட 6 பேர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

போட்டியும் நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டிருப்பதால், அனைவரும் எல்லா டாஸ்கிலும் பங்கெடுத்து நியாயமாக விளையாடியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் பின்தங்கியிருப்பவர்கள் நிச்சயம் வெளியேறிவிடுவார்கள். இதுஒருபுறம் இருக்க, இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அதனால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவாரா? இல்லை வேறு யாரேனும் தொகுத்து வழங்குவார்களா? என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.