ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் ‘காஸ்’ சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய், மகன் இருவரும் பலியாகினர்.
ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் சந்திமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், தாய் மற்றும் 4 வயது மகன் என இரண்டு பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இந்த விபத்தில் ஹமீதா பேகம், 40, அவரது 4 வயது மகன் அகிப் அகமது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்து பலியாகினர். ஹமீதா பேகமின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அக்கம் பக்கத்தினரும் விபத்தில் இருந்து தப்பித்தனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement