பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் விசாரணை நடந்தது. பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த பிறகு சூர்யாவும், டெய்சி தங்கையாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டெய்சி, “இந்த விவகாரத்தை எங்களுக்குள் பேசி விட்டுவிடுவோம் என்று முடிவெடுத்துவிட்டோம். பிரதமரின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு இந்தக் கட்சிக்கு வந்திருக்கிறோம். ஏதோ ஒரு கண் பட்ட மாதிரி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. அவர் என் தம்பி மாதிரி.
ஆரம்பத்தில் அவர் என்னை அக்கா என்று அழைத்தார். நான் அவரை தம்பி என்றே அழைத்தேன். இனியும் நாங்கள் அப்படியே பயணிப்போம். ஒழுக்கமான கட்சி என்று பெயர் எடுத்திருக்கும்போது இது ஒரு சின்ன அசம்பாவிதம்” என்றார். கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்தையும் திருச்சி சூர்யாவும் தெரிவித்தார்.
<
என்னது தம்பியா ?!
அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை.
அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. @DaisyThangaiya வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..
இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே https://t.co/ONkMTFLa17— Kasturi Shankar (@KasthuriShankar) November 24, 2022
அவர்களின் இந்தக் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அக்காவும், தம்பியும் இப்படியா பேசிக்கொள்வார்கள் என பலர் ட்ரோல் செய்துவருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னது தம்பியா ?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்சிக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! உவ்வே” என குறிப்பிட்டுள்ளார்.