சென்னை: வழக்கு ஒன்றின் பொது பெண் மனுதாரரிடம் வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கவர்த்தி மன்னிப்பு கேட்டார். உயர் நீதிமன்றத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் மன்னிப்பு கோருகிறோம் என நீதிபதி தெரிவித்தார். மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும் அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
