திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவர் கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். முதல் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் சரண்யா (23 ) தனியார் கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சரண்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்த போது தாயார் கண்டித்ததால் கடந்த 11ஆம் தேதி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
போலீஸார் விசாரணையில் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சரண்யா அன்சாகரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான அருண் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் தனது சகோதரி கார்த்திகாவுக்கு தெரிவித்துள்ளார்.
கார்த்திகா அளித்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு உயிரிழந்தார்.
சரண்யா எலி மருந்து கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in