அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயது பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி கொழும்பு களனி பிரதேசசபை (24)மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணியை எதிர்கொண்ட மகாஜனக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
இந்த போட்டியில் இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.