முதல் ஆக்கி போட்டி : ஆகாஷ்தீப் ஹாட்ரிக் கோல் வீண் – இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

அடிலெய்டு,

இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.

பரபரப்பான இந்த போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார் .ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார் .

ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் (2 கோல் அடித்தார் . லாச்லன் ஷார்ப் , நாதன் எஃப்ராம்ஸ் , டாம் கிரேக் ஒரு கோல்களை அடித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.