சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் புகைப்படம் இணையத்தில் எப்போழுதும் வைரலாகும். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் தோனி பங்கேற்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, அவரது சகோதரர் குர்னல் பாண்டியா, தோனியின் மனைவி சாக்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் தோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் அவருடன் பாண்டியா சகோதர்கள், இஷான் கிஷான் உள்ளிட்டோர் உற்சாக கொண்டாடினார்.
இதை அவரது மனைவி சாக்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை தோனியின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
newstm.in