
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசக்தி (16) என்ற சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டுக்கு சென்றான்.
சிறுவனின் தாத்தா உடன் அங்குள்ள ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க ஜெயசக்தி சென்றதாக தெரிகிறது. தாத்தா சீனிவாசன் மாடு மேய்க்க, ஜெயசக்தி அங்குள்ள ஏரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஜெயசக்தியை காணவில்லை. அவனை அந்த பகுதியில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏரிக்குள் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர், தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரிக்குள் இறங்கி சிறுவனை தேடினர். அப்போது ஜெயசக்தி ஏரிக்குள் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் சிறுவனின் உடலை கண்டெடுத்தனர்.
மாணவனின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
newstm.in