கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூரில் ஒரு மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் இருவர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷயாவு தாக்கி இருவரும் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷயாவு தாக்கி கிடந்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன் பின்னர், கழிவுநீர் தொட்டியில் இருந்து இருவரும் மீட்கப்பட்டனர். தற்போது இரண்டு பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.