பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பதுளை, ஹப்புத்தளை பிராந்திய பிரிவுக்கு இந்த அபாயம் இருப்பதாக மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.