
‛பாபா' ரீ-ரிலீஸ் : டப்பிங் கொடுத்த ரஜினிகாந்த்
2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே தயாரித்தும் இருந்தார். ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்போது இந்த படம் வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் பாபா திரைப்படம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாபா படத்தின் புதிய வடிவத்தின் காட்சிகளுக்கு ஏற்ப டப்பிங் பேசி முடித்துள்ளார் ரஜினி. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது .