பெரும் வரவேற்புப் பெற்ற ‘புல்லட்’ பாடலைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, மீண்டும் ஒருப் பாடலை தெலுங்கில் பாடி அசத்தியுள்ளார்.
நடிகர், இயக்குநர், பாடகர் எனப் பல திறமைகளுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் சிம்பு. தனது படங்களுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார். அந்த வகையில், இவர் அண்மையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் ‘புல்லட்’ பாடலைப் பாடியிருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Team #18Pages is delighted to have @SilambarasanTR_ on board for the next single #TimeIvvuPilla #ThankYouSTR ~ #STRFor18Pages
Full song out on DEC 5th!@aryasukku @actor_Nikhil @anupamahere @dirsuryapratap @GopiSundarOffl #BunnyVas @lightsmith83 @NavinNooli @adityamusic pic.twitter.com/t4lxQguPbc
— Geetha Arts (@GeethaArts) November 28, 2022
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தேசிய விருதுபெற்ற மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் இசையமைக்கும் ‘18 Pages’ என்ற தெலுங்குப் படத்தில், நடிகர் சிம்பு ‘டைம் இவ்வு பில்லா’ என்றப் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமார் எழுத்தில், பல்நட்டி சூரிய பிரதாப் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘18 Pages’ திரைப்படம். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.