மஹவ முதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை மறுசீரமைக்கப்படுவதனால்இ ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு ரயில் பாதை மூடப்படவுள்ளதாக வெகு ஜன ஊடக அமைச்சரும் போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்றும் 5வது நாளாக தொடர்ந்தும் நடைபெற்றது. வரவு செலவுத் திட்டத்தில் வெகுஜன ஊடகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் அமைச்சர் இன்று உரையாற்றிய போதே இந்த விடயத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.