நடிகர் தனுஷின் புதியப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்துமுடிந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘லீடர்’, ‘ஃபிடா’, ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட வித்தியாசமானப் படங்களை தந்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா. இவர் அடுத்ததாக நடிகர் தனுஷின் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அந்தப் படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
The Remarkable Moment is here for the Path Breaking Combo
Superstar @dhanushkraja
Director @sekharkammula TRILINGUAL FILM Launched today on a Grand Note with a pooja ceremonyFILMING BEGINS SOON #NarayanaDasNarang @AsianSuniel @puskurrammohan @SVCLLP #AmigosCreations pic.twitter.com/qwoFeXUPWJ
— (@UrsVamsiShekar) November 28, 2022
தற்போது தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள பைலிங்குவல் படமான ‘வாத்தி/சர்’ என்ற திரைப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி பிப்ரவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘வாத்தி’, சேகர் கம்முலா படங்களைத் தொடர்ந்து 3-வதாக தெலுங்கு இயக்குநர் வேணு உடுகுலா படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.