
மகாராஷ்டிராவில் ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் புனே செல்லும் ரயில் வந்து நின்றது. அதில் ஏறுவதற்காக பயணிகள் ரயில்வே நடைமேம்பாலம் வழியாக அதிக அளவில் நடந்து சென்றனர்.
அப்போது நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் நடந்து சென்ற சிலர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், நடைமேம்பாலத்தின் பிளாட்பாரத்தில் 2 சிலாப் உடைந்து விழுந்துள்ளது. ஆனால் அந்த பாலத்தின் மற்ற பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது, என அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in