அரச ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கு விசேட பிரிவு

அமைச்சின் ஊழியர்கள் அல்லது அதிகாரிகளினால் ஊழல், மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படடிருந்தால், அல்லது அது குறித்து தகவல் தெரிந்திருந்தால், குற்றப்குலனாய்வுப் பிரிவுக்கு நேரடியாக எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்; ஊடக வியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அரசாங்க அதிகாரிகள் இருவர் மிளகாய் பயிரிடுகிறோம் என்ற போர்வையில் பல ஏக்கர் காணிகளில் மணல் அகழும் மோசடியில் ஈடுபட்டதான விடயத்தை தனியார் தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது’ என்று; ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

‘சட்டம் அனைவருக்கும் சமமானது, என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரனை செய்வதற்கு விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து எதிர்வரும் அமைச்சரவையில் கலந்துரையாடுவோம்.’ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.