ஆப்கானிஸ்தான் தொடருக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிக்கு இடைப்பட்ட இடைவெளியில், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது, இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் மூன்று நாள் இடைவெளி கிடைத்தது.

இந்த இடைவெளியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களான கசுன் ராஜித, பதும் நிசங்க மற்றும் சரித் அசலங்கா ஆகிய மூவருக்கும் திருமனம் நடந்து முடிந்தது.

இலங்கை கிரிக்கெட் வாழ்த்து

ஆப்கானிஸ்தான் தொடருக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள்! | Three Sri Lankan Cricketers Get Married Afg SeriesTwitter @OfficialSLC

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), அதன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தது திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிந்துகொண்டது.

திருமணங்கள் முடிந்த பிறகு, ஒட்டுமொத்த அணியினரும் இணைந்து ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்னர், அப்போது அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு மதுஷங்க கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ரஜித, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரம, தில்ஷான் மதுஷங்க மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகிய ஐந்து கிரிக்கெட் வீரர்கள், Desi Girl எனும் பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டித் தொடர்

இலங்கை-ஆப்கானிஸ்தான் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 30 புதன்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தொடரின் தொடக்க ஆட்டத்தை வென்ற ஆப்கானிஸ்தான் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.