கொந்தளிக்கும் மக்கள்… உலக நாடுகளில் இருந்து உண்மையை மறைக்க சீனாவின் அருவருப்பான செயல்


சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான நாடுதழுவிய போராட்டங்களின் தகவல்களுக்கு பதிலாக சமூக ஊடகங்களில் சீன மக்களுக்கு ஆபாச காட்சிகள் பகிரப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வீதிகளில் இறங்கி போராட்டம்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷாங்காய், வூஹான் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கொந்தளிக்கும் மக்கள்... உலக நாடுகளில் இருந்து உண்மையை மறைக்க சீனாவின் அருவருப்பான செயல் | China Protest Hashtag Attempt At Hiding

@Shutterstock

ஆனால், இந்த போராட்டங்களின் டுவிட்டர் பதிவுகளை சீனா அரசாங்கம் உடனடியாக நீக்கியும் வருகிறது.
போராட்டங்கள் தொடர்பில் தகவல் திரட்டும் சீன மக்களுக்கு ஆபாச காட்சிகள் அவர்களின் சமூக ஊடக பக்கத்தில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்

மட்டுமின்றி, பத்திரிகையாளர்களும் தகவல் திரட்ட முடியாமல் திணற, இந்த விவகாரம் தொடர்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஷாங்காய் என பதிவு செய்து தகவல் திரட்டினாலே, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளே தென்படுவதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொந்தளிக்கும் மக்கள்... உலக நாடுகளில் இருந்து உண்மையை மறைக்க சீனாவின் அருவருப்பான செயல் | China Protest Hashtag Attempt At Hiding

@getty

போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நகரங்களின் பெயர்களில் இதுபோன்ற முகம் சுழிக்கவைக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீனா நிர்வாகம் திட்டமிட்டே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சீனாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டிருந்தாலும், அங்குள்ள இளையோர்கள் பலர் VPN பயன்படுத்தி டுவிட்டர் செயலி அல்லது இணைய பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.