சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்


விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய கீதம் பாட மறுப்பு

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஈரான் அணி, இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
குறித்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் எவரும் ஈரானின் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்தனர்.

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது... கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் | Iran Team Threatened Imprisonment And Torture

@EPA

இந்த விவகாரம் ஈரானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்க அணியுடன் ஈரான் மோத உள்ளது. ஆனால் விதிகளுக்கு எதிராக தேசிய கீதத்தை பாட மறுத்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவார்கள் எனவும், சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் ஈரான் கால்பந்து அணிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கத்தாரில் முகாமிட்டுள்ள ஈரானின் பாதுகாப்பு அமைப்பான IRCG அதிகாரிகள், ஈரானிய கால்பந்து வீரர்கள் 26 பேர்களையும் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.
அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்பது தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது... கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் | Iran Team Threatened Imprisonment And Torture

@reuters

ஈரான் கால்பந்து அணிக்கு மிரட்டல்

மட்டுமின்றி, ஒவ்வொரு ஈரானிய வீரர்களும் IRCG அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், லீக் ஆட்டத்தில் கடைசியாக அமெரிக்க அணியை ஈரான் எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ஈரானிய வீரர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சிக்கலில் தள்ளும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் நடந்துவரும் நாடுதழுவிய போராட்டங்களில் இதுவரை 18,000 பேர்கள் வரையில் கைதாகியுள்ளனர்.

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது... கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் | Iran Team Threatened Imprisonment And Torture

@getty

இளம் பெண் ஒருவரின் மரணத்திற்கு நீதி கேட்டும் போராடு மக்களில் 450 பேர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றே மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.