சீனாவுடனான நட்பின் பொற்காலம் முடிந்துவிட்டது: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்ற செய்தியை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கிலாந்தின் ‘மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு’ சீனா தொடர்ந்து சவால் விடுத்து வருவதாக கூறிய அவர், வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில், ரிஷி சுனக் சீனாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சீனாவைப் பற்றி ரிஷி சுனக் என்ன சொன்னார்
சீனா தொடர்பான நமது அணுகுமுறையை இன்னும் கவனமாக கையாள வேண்டும். நமது மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிராக சீனா தொடர்ச்சியான சவாலை முன்வைத்து வருவதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்று தனது உரையில் ரிஷி சுனக் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 9 மனைவிகள் பத்தலையாம்… 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!

சீனா சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது மேலும் மேலும் அதிகரித்து வரும் சவால் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், உலகளாவிய பிரச்சினைகள் முதல் பொருளாதார நிலை மற்றும் காலநிலை மாற்றம் வரையிலான விஷயங்களில் சீனாவின் செல்வாக்கை நாம் புறக்கணிக்க முடியாது என்று தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகளும் இதைப் புரிந்து கொள்கின்றன. எனவே வேகமாக வளர்ந்து வரும் இந்த போட்டியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும் என்று ரிஷி சுனக் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ரிஷியின் கருத்து ‘ஆபத்து எண். 1’
சீனாவுக்கு எதிராக கடுமையான கருத்தை, ரிஷி சுனக் முதல்முறையாக சொல்லவில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீனாவை பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் நம்பர் ஒன் நாடு என்று தெரிவித்திருந்தார்.  

மேலும் படிக்க | வழக்கை ஒத்திவைத்த நீதிபதி… கத்தியை காட்டிய குற்றவாளி – நீதிமன்றத்தில் பரபரப்பு

பிபிசி பத்திரிக்கையாளர் கைது விவகாரத்தில் உறவுகள் பதற்றம்
ஒரு பத்திரிகையாளருடனான அணுகுமுறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நேரத்தில் சுனக்கின் இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் லாக் டவுன் போராட்டத்தின் போது பிபிசி செய்தியாளர் எட் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார். லாரன்ஸ் பல மணி நேரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். சீன காவல்துறையினரால் லாரன்ஸ் தாக்கப்பட்டதாக பிபிசி கூறுகிறது.

ஊடக சுதந்திரம் அவசியம்
இது போன்ற விஷயங்களை அச்சமில்லாமல் செய்தியாக்க ஊடகங்களை அனுமதிக்க வேண்டும் என்று ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். சின்ஜியாங் மற்றும் ஹாங்காங்கில் சீன அரசாங்கத்தின் அத்துமீறல்களையும் சுனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | சீனாவில் அதிபருக்கு எதிராக உச்சத்தை எட்டும் ஆர்ப்பாட்டங்கள்! மக்களை அடக்கும் போலீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.