வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்


வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த இலங்கை தமிழரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வியட்நாம் முகாமில் 37 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிகரன் என்பவர்  தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தந்தையின் முகத்தை கடைசியாக குழந்தைகளுக்கு காட்ட உதவுகள் என்று இலங்கையில் வாழும் அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோளினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தரப்பிலிருந்து இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Sri Lankan Died In Vietnam

இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் சிக்கல்

உயிரிழந்த இலங்கையரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் செலவாகும் என்பதனால் நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் உடலை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, வியட்நாம் முகாமில் உள்ளவர்களில் 85 பேர் இலங்கைக்கு வருகை தர இணக்கம் தெரிவித்துள்ளனர். இவர்களை இன்னும் இருவார காலத்திற்குள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Sri Lankan Died In Vietnam

இவர்களில் 37 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிகரன் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவரின் உடல் அங்கேயே இருக்கின்றது. அவரை உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா செலவாகும்.அவரின் மனைவியும் அவரின் பிள்ளைகளும் அவருடைய முகத்தை பார்க்க விரும்புகின்றனர். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை

இந்த விடயம் தொடர்பில் வியட்நாமில் உள்ள இலங்கைக்கான தூதுவருடன் கலந்துரையாடினேன். 303 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் 2 பேர் மதுசாரம் கொண்ட கைகழுவும் திரவத்தை குடித்துள்ளனர்.

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Sri Lankan Died In Vietnam

இலங்கைக்கு வர முடியாது என்று கூறுபவர்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவை அவர்களிடம் விசாரணை நடத்தும். அது நீண்டதொரு வழிமுறையாகும்.

இந்நிலையில் இறந்தவரின் உடலை கொண்டு வருவதற்கு 3 மில்லியன் நிதியை எங்களுக்கு செலுத்துவதற்கு அனுமதியில்லை.அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இல்லாவிட்டால் அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும். இது குறித்து குடும்பத் தரப்பில் இருந்து பதில் வரும் வரையில் காத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.