40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA…


கனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பெண்கள் வழக்கில், குற்றவாளி தற்போது சிக்கியிருக்கிறார்.

1983ஆம் ஆண்டு ரொரன்றோவில் நடந்த பயங்கர கொலைகள்

1983ஆம் ஆண்டு ரொரன்றோவில் இரண்டு பெண்கள் கொடூரமாக வன்புணரப்பட்டுக் குத்திக் கொல்லப்பட்டார்கள்.

வளர்ந்துவரும் ஒரு ஃபேஷன் டிசைனராக இருந்த Erin Gilmour (22) என்ற இளம்பெண் வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார்.

அவர் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, Susan Tice (45) என்ற சமூக சேவகி அதேபோல வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார்.

40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA... | 1983 Toronto Cold Case Murders

Source: Ontario Police Department

இரண்டு பேரும் வெவ்வேறு நேரத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், 2000ஆம் ஆண்டு DNA சோதனைகளின் அடிப்படையில், இரண்டு குற்றங்களையும் செய்தது ஒரே நபர்தான் என தெரியவந்தது.

தற்போது அந்த கொலைகள் தொடர்பாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த Joseph George Sutherland என்னும் 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட Joseph மீது Erin மற்றும் Susanஐக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Joseph கைது குறித்து பேசிய Erinஉடைய சகோதரரான Sean McCowan, Erin மற்றும் Susan கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சிக்கியுள்ள விடயம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, நாங்கள் எங்கள் வாழ்நாளில் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA... | 1983 Toronto Cold Case Murders

Source: Ontario Police

40 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி

பொலிஸ் துறை துப்பறியும் அதிகாரியான Steve Smith, இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும்போது, ஒரு குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட அறிவியல் முன்னேற்றம் உதவியது. பின்னர் அந்தக் குடும்பத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் சிக்கினார் என்று கூறியுள்ளார். அதாவது DNA தொழில்நுட்பத்தின் உதவியால் குற்றவாளி சிக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் இரண்டு கொலைகளையும் செய்த Joseph ரொரன்றோவிலேயேதான் வாழ்ந்துவந்துள்ளார் என்று கூறிய Smith, வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக இதற்குமேல் இப்போதைக்கு விவரங்களை வெளியிடமுடியாது என்றார்.

டிசம்பர் மாதம் 9ஆம் திகதி Joseph நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.