இளவரசி டயானாவின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் நடந்த மாற்றம்! புகைப்படத்தை பார்த்து வியக்கும் மக்கள்



பிரித்தானிய இளவரசி டயானாவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு புது தோற்றத்துடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை அவரின் சகோதரர் வெளியிட்டுள்ளார்.

இளவரசி டயானா

மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து டயானாவின் உடல் அவர் சிறுவயதில் வளர்ந்த Althorp House பகுதியில் தான் புதைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரது கல்லறை ஒரு பரந்த ஏரியின் நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் டயானாவின் சகோதரர் Earl Charles Spencer கடந்த திங்களன்று, புதுப்பிக்கப்பட்ட டயானாவின் கல்லறை புது பொலிவுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை விட சிறந்த இடம் இல்லை

இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதில் சிலர், அந்த பகுதியே மூடுபனியில் மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் அதே நேரம் கடுமையான சோகத்தையும் கொடுக்கிறது என தெரிவித்துள்ளனர்.

மற்றொருவரின் பதிவில், இந்த அழகான படங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி, இளவரசி டயானாவுக்கு இதைவிட சிறந்த இடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் Althorpக்கு வருகை தரும் போது, ​​அவர்கள் டயானாவுக்கு அஞ்சலி செலுத்த தீவை அணுக முடியாது, இருப்பினும் அங்கு ஒரு பிரத்யேக இடம் உள்ளது, அங்கு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியின் மறைந்த தாய்க்கு மலர் அஞ்சலி செலுத்த மக்களை Earl அனுமதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.