தமிழக டிஜிபியுடன் என்ஐஏ இயக்குனர் திடீர் ஆலோசனை…

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா இன்று அதிகாரிகள் சென்னையில்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியை மத்தியஅரசு தடை செய்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி பதற்றத்தை உருவாக்கினர். அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணையில், பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பல இடங்களில் குண்டு வைக்க இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின்போது, சென்னை உள்பட பல இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் பலர் தொடர்பில் இருந்து கண்டறியப்பட்டு உள்ளது. இதுஅதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பில் சிக்கிய 2 பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் கோவை, சென்னை, நாகை உள்பட  உள்பட பல இடங்ங்களுக்கு சென்றதும், பலரிடம் தொடர்பு கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஏன்ஐஏ அதிகாரிகள், கோவை,மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வந்து தங்கி சென்றது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் என்ஐஏ அமைப்பின் இயக்குனர் தின்கர் குப்தா இன்று மாலை டிஜிபி அலுவலகம் வந்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குனர் தின்கர் குப்தா தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பேசியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த அல்சோனை கூட்டத்தில் தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பது குறித்து மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள முக்கிய தகவல்கள் மற்றும் தீவிரவாதிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.