
வடக்கு ஆப்கானிஸ்தானில் மதப்பள்ளி ஒன்றில் குண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தலிபான்கள் ஆட்சி செய்துவரும் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதே போல் அங்கு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதப் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in