பாடசாலை மாணவர்களின் பைகளில் இருந்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்


இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை மாணவர்களின் பைகளில் ஆணுறை, மது போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

செல்போன் சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து நகரின் 80 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் திடீர் சோதனையை நடத்தினர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆசிரியர்களுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.

சோதனையின் போது செல்போன்கள் தவிர 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் மற்றும் ஒயிட்னர்கள் இருந்துள்ளன.

மாணவர் ஒருவரின் பையில் வாய்வழி கருத்தடை மாத்திரை இருப்பதைப் பார்த்து ஆசிரியர்கள் மிரண்டு போயினர்.

அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் பையில் இருந்து ஆணுறை கைப்பற்றப்பட்டதாக அப்பள்ளியின் முதல்வர் கூறினார்.

மேலும் அந்த மாணவியிடம் விசாரித்தபோது தனது நண்பர்களை குற்றம்சாட்டினார்.

பாடசாலை மாணவர்களின் பைகளில் இருந்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள் | Condoms Cigarettes Found School Students Bags

பெற்றோர்களுக்கு  பேரதிர்ச்சி

இந்த சோதனைக்கு பிறகு குறித்த மாணவ, மாணவியரின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள் அவர்களிடம் நடந்தவற்றை கூறினர்.

பெற்றோர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

அதன் பின்னர் குறித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடசாலையின் முதல்வர், பாடசாலைகளில் ஆலோசனை அமர்வுகள் இருந்தாலும்,வெளியில் இருந்து குழந்தைகளுக்கு வேறு உதவியை நாடுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மோசமான நடத்தை

இந்த நிலையில் கர்நாடக பாடசாலைகளின் சங்க நிர்வாகத்தின் பொதுச்செயலாளர் கூறுகையில்,

‘ஒரு மாணவரின் பையில் வாய்வழி கருத்தடை மருந்துகள் இருந்தன. மேலும் தண்ணீர் போத்தல்களில் மது இருந்தது.

கடந்த சில நாட்களாக ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் உட்பட சில மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களை துன்புறுத்துவதையும், மோசமான வார்த்தை, ஆபாச சைகைகள் போன்றவற்றை பயன்படுத்துவதையும் கவனித்தோம். இதனை தடுக்க நாங்கள் போராடி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.