பிரபாஸ் மீது காதலா : கிரித்தி சனோன் விளக்கம்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கிரித்தி சனோன். பிரபாஸ் ஜோடியாக 'ஆதி புருஷ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் பிரபாஸ், கிரித்தி சனோன் இருவரும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்தபடி இருந்தது.

இந்நிலையில் கிரித்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவரும், படத்தின் நாயகன் வருண் தவானும் கலந்து கொண்டனர். அப்போது வருண் தவான் பேசுகையில், 'கிரித்தி சனோன் வேறு ஒருவர் இதயத்தில் இருக்கிறார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார்,” எனக் கூறியிருந்தார். அவர் சொன்ன நபர் பிரபாஸ் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதைத் தொடர்ந்து இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக மீடியாக்களில் செய்திகள் வந்தன.

ஆனால், அவற்றை மறுத்து “பொய்யான செய்தி” என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார் கிரித்தி .“அது காதலும் இல்லை, பிஆர் (பப்ளிசிட்டி)ம் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது 'பேடியா' (ஓநாய்) கொஞ்சம் காட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது நீர்க்குமிழியை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை,” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தற்போதைக்கு பிரபாஸ் – கிர்த்தி சனோன் காதல் பற்றிய செய்திகளுக்கு இடைவெளி விழுந்துவிடும். இப்படி மறுக்கப்பட்ட எத்தனையோ காதல் கதைகள் கல்யாணத்தில் தான் முடிந்திருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.