நடிகர் விஷ்ணு விஷால் ‘கட்ட குஸ்தி’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, தன்னுடைய அரை நிர்வாண புகைப்படம் வெளியானதன் பின்னணியை கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால்.
பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங், தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த சமயத்தில் விஷ்ணு விஷாலின் அரைநிர்வாண புகைப்படமும் வெளியானது. இதுகுறித்து கட்ட குஸ்தி திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, அந்த புகைப்படத்தை தான் வெளியிடவில்லை, லீக் செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார். மேலும், தன்னுடைய அந்த அரை நிர்வாண புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“அந்த போட்டோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை வெளியிடாமல் வைத்திருந்தேன். ரன்வீர் சிங்கின் போட்டோஷூட் வெளியானபோது நீயும் உன்னுடைய போட்டோவை போட்டா என்ன? என எனது மனைவி ஜுவாலா கட்டா தான் அதை லீக் செய்துவிட்டார்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.