ஷ்ரத்தா கொலை: அப்தாப் டேட்டிங் ஆப் மூலம் 20 பெண்களுடன் தொடர்பு…!

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் அப்தாப் பூனாவாலாவின் சமீபத்திய காதலி, அவரது கொடூரமான செயலைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அவரது கொடூரமான செயலைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார், மேலும் ஆப்தாபின் சத்தர்பூர் இல்லத்தில் மனித உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து தனக்கு எந்த துப்பும் இல்லை என்று கூறினார்.

கொலைக்குப் பிறகு இரண்டு முறை அங்கு சென்றபோது. அப்தாப் தனக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்ததாகவும் அவள் தெரிவித்தார். அக்டோபர் 12 அன்று ஆப்தாப் ஒரு ஆடம்பரமான மோதிரத்தை பரிசளித்தார். ஆனால் இந்த மோதிரம் ஷ்ரத்தாவுக்கு சொந்தமானது. போலீசார் அப்தாபின் காதலியிடமிருந்து மோதிரத்தை மீட்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.அப்தாபின் கூட்டாளி தொழில் ரீதியாக மனநல டாக்டர் ஆவார்

அப்தாப் வெவ்வேறு டேட்டிங் தளங்கள் மூலம் சுமார் 15 முதல் 20 பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

விசாரணையின் போது, ​​போலீசார் டேட்டிங் ஆப் மூலம் ஷ்ரத்தா கொல்லப்பட்டு சுமார் 12 நாட்களுக்குப் பிறகு, மே 30 அன்று ஆப் மூலம் அப்தாப்புடன் தொடர்பு கொண்ட பெண் மனநல டாக்டரை கண்டறிந்தனர்.

அவர் அப்தாபின் மனநல டாக்டர் தோழி, அவனது நடத்தை சாதாரணமாகவும், மிகவும் அக்கறையுடனும் இருப்பதாகத் தோன்றுவதாகவும் கூறினார்.

அப்தாப் பல்வேறு வகையான வாசனை திரவியங்களின் பாட்டில்களை வைத்திருந்தார். அவர் அடிக்கடி அவருக்கு வாசனை திரவியங்களை பரிசாக கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை அப்தாப்பின் பிளாட்டுக்கு வந்து உள்ளேன். ஆனால் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டதாகவோ அல்லது வீட்டில் மனித உடல் உறுப்புகள் இருந்ததாகவோ எனக்கு எந்த குறிப்பும் இல்லை. அப்தாப் ஒருபோதும் பயந்ததா தெரியவில்லை என கூறி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.