முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலையில் உள்ளது. டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 563 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 2-வது சுற்று முடிவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 14,211 வாக்குகள் பெற்றுள்ளார்.

"மம்தா பானர்ஜி பங்கேற்றதால் தான் நான் பங்குபெறவில்லை" – பாஜக அண்ணாமலை

“சேகர்பாபு ஒவ்வொரு காற்றுக்கும் வரும் பட்டத்தை போன்றவர் கட்சி மாறிக்கொண்டே இருப்பார் அதிமுகவில் இருந்த போது திமுகவை விமர்சித்தவர், நாளை எங்கிருப்பாரோ எனவும், மம்தா பானர்ஜி பங்கு கொள்ளும் ஒரு நிகழ்வில் பங்கு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினால் தான் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்கவில்லை எனவும், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று பங்கேற்று 350 … Read more

தென் கொரிய உயர்ஸ்தானிகர்  உடத்தலவின்னவுக்கு விஜயம்

இலங்கைக்கான தென் கொரிய உயர்ஸ்தானிகர் சென்தூஸ் வூன்ஜின் ஜெஒன்ங் விஜயம் உடத்தலவின்னவுக்கு விஜயம் செய்துள்ளார். தென்கொரியாவில் கடந்த மாதம் 29 அம் திகதி இடம்பெற்ற சன நெருசல் சம்பத்தில்  உயிரிழந்த உடத்தலவின்ன வாலிபரின் இல்லத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக உயர்ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தென் கொரிய நெருசல் சம்பவத்தில் உயிரிழந்த 160 பேர்களில் இலங்கையைச் சேர்ந்த கண்டி மாவட்டத்தின் உடத்தலவின்ன  27 வயதுடைய முஹமட் ஜினத் எனபவர் உயிரிழந்தார். துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினரின் இல்லத்திற்கு விஜயம் செய்த … Read more

மத்திய அரசு பணி.. மாதம் ரூ.69,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) காலியாக உள்ள 119 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Assistant பணியிடங்கள்: 119 வயதுவரம்பு: 9.11.2022 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100 தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் … Read more

100 நாள்களைக் கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் – செயல்படுத்தத் துடிக்கிறதா தமிழக அரசு?

(நவம்பர் 5, 2022) நேற்றுடன் 100 நாள்களைக் கடக்கிறது, பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களின் புதிய விமான நிலைய எதிர்ப்பு போராட்டம். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமையவிருக்கிறது என்ற அரசின் அறிவிப்பு வெளியானது முதலே, விமான நிலையத்தால் தங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகளை இழக்கநேர்ந்த பரந்தூர், ஏகனாபுரம், அக்கம்மாபுர, தண்டலம், நெல்வயல் உள்ளிட்ட 12 கிராம மக்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

மீனவர்கள் மீதான தாக்குதல்-மனிதாபிமானத்துடன் நடந்து கொள்க.. இலங்கையிடம் இந்திய கடற்படை வலியுறுத்தல்..!

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுமாறு இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடற்படை வலியுறுத்தியுள்ளது. இந்திய கடற்படையின் தமிழக மற்றும் புதுச்சேரி பொறுப்பு அதிகாரியான வெங்கட்ராமன்  மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி தென்னகன் ஆகியோர் இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகளை இலங்கையின் சாயுரா கப்பலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களில் இலங்கைக் கடற்படை ஈடுபடுவது தொடர்பான பிரச்சினையை எழுப்பிய இந்திய … Read more

கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது தாளாளர் வீட்டில் 300 பவுன், ரூ.50 லட்சம் கொள்ளை? – சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்

விழுப்புரம்: சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, பள்ளி தாளாளர் வீட்டில் இருந்த 300 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவனை பிடித்து, விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி அந்த … Read more

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் – இமாச்சல் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி

சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேச பேரவைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் தானி ராம் சண்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தயார் நிலையில் மீட்பு படையினர்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் வருகிற 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2,048 வீரர்கள், 5,093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: … Read more