இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில … Read more

மாதச்சந்தா 8 டாலர் செலுத்தினால் டுவிட்டரில் ஆப்பிள் ஐ போன் பயன்படுத்துவோருக்கு புளு டிக் அடையாளம்..!

டுவிட்டர் நிறுவனம் மாதச்சந்தா 8 டாலருக்கு புளுடிக் அடையாளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஆப்பிள் ஐ போன் IOS ஆப்பை பயன்படுத்துவோருக்கு விரைவில் இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி எஸ்தர் கிராப்போர்ட் விளக்கம் அளித்துள்ளார். விளம்பரங்களை பாதியாகக் குறைக்கவும் நீங்கள் பின்தொடரும் பிரபலங்களைப் போலவே புளு டிக் அடையாளத்தைப் பெறவும் விரைவில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், நீளமான வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் போடவும் டிவிட்டரில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். … Read more

அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம்

மொறுமொறு தோசை மற்றும் சட்னி, சாம்பாரை கண்டால் யாருக்கு தான் நாவில் எச்சில் ஊறாது? தோசையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதே சமயம் எண்ணெய் மிதக்க தோசை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இது கொலஸ்டாரை அதிகப்படுத்தும். முக்கியமாக இது போன்ற தோசைகளை இதயநோயாளிகள் சாப்பிடக்கூடாது. ஒரு மசால் தோசையில் 387 கலோரி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல ஒரு சாதா தோசையில் 133 கலோரிகள் உள்ளது. இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை … Read more

பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது

சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று காலை நாடு திரும்பியது.

பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது

சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீஸ் கைது செய்தது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு 1 எம்பி, 5 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல்: டிச.5ல் நடக்கிறது

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் காலமானார். இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி காலியானது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சட்டமன்ற தொகுதி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முகமத் அசாம் கான் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு காரணங்களால் ஒடிசாவின் பதம்பூர், பீகாரின் குர்ஹானி மற்றும் சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் சட்டமன்ற தொகுதிகளும் காலியானது. இதனை தொடர்ந்து மெயின்புரி மக்களவை மற்றும் காலியாக உள்ள 5 சட்டமன்ற … Read more

திருப்பூர்: முறையான சிகிச்சை அளிக்கவில்லை-மனைவி இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, மனைவி உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு கணவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டியைச் சேர்ந்த ஜெய்காந்த் (33) இவருக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த நித்யா (28) இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடம் கடந்த நிலையில் மூத்த ஆண் குழந்தைக்கு இரண்டு வயது முடிவடைந்த நிலையில். … Read more

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷ்யாம் நேஹி காலமானார்| Dinamalar

சிம்லா, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான, ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த, 106 வயது முதியவர், வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக 1952 துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. பனி மூட்டம், பலத்த மழை போன்ற மோசமான வானிலை காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன், 1951 இறுதியில் ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. இதில், … Read more

இலங்கையில் குரங்கம்மை: நோயாளி குணமடைந்து வருகிறார்

குரங்கம்மை அல்லது மங்கிபொக்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர் குணமடைந்து வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் அடையாளங்காணப்பட்ட முதலாவது குரங்கம்மை நோயாளர் குறித்து சுகாதார பிரிவு தெரிவிக்கையில் ,குரங்கம்மை நோய் குறித்து பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் கடந்த மே மாதம் தொடக்கம் இந்த நோய் பரவிய போதிலும் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் … Read more

Tamil news today live: பாலியல் புகார்: ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது

Tamil news today live: பாலியல் புகார்: ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது Source link