கல்வியில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய உடன்பாடு அவசியம்

கல்வியில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் எட்டாவது நாள் இன்று (01).

கல்வி ,பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்,”சர்வதேச ரீதியல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் அமைப்பதன் முக்கியத்துவத்தையும்” அமைச்சர் சுட்டிக்காட்டிகாட்டினார்.

இலாபத்தை இலக்காகக் கொள்ளாத மருத்துவ பீடம் உட்பட பல்கலைக்கழகங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் உடன்பாட்டுடன் முதலீட்டுப் பாதுகாப்பை ஏற்படுத்தும்; சடட் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 வெளிநாடுகளில் கல்வியினை தொடர்வதற்காக வருடாந்தம் ஒரு லட்சத்த 30 ஆயிரம் மாணவர்கள் வீசா பெறுகின்றனர். இதற்காக வருடம் ஒன்றில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படுகிறது. அந்நியச் செலவாணி நெருக்கடி நிலவும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நிதி செலவிடப்படுவதினால் நாடு மிகுந்த பிரச்சனையை எதிhகொள்கிறது. இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய:

தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கல்விததுறையில்; தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய வைத்திய பீடங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் தற்போதுள்ள வைத்திய பீடங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். சிறுவர்களை பாதுகாக்கும் விடயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு சமூக பாதுகாப்பு முறைமையினை மேம்படுத்த வேண்டும்; என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

பல்கலைக்கழக பாடங்கள் வேலை வாய்ப்பினை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நீண்டகால திட்டங்களுககு அமைவாக பல்கலைக்கழக கல்விக்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்; என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை விரைவாக நிவர்த்திக்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்களின் வகிபாகம் மேலும் அதிகரிக்கப்பட  வேண்டும். தொழில்க் கல்வியினை அபிவிருத்தி செய்வதற்கு துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு அவசியம். உயர் கல்வித்துறையினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.