ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக தள்ளுவண்டியில் மது விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் பல்வேறு வகைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து கடத்தூர் போலீசார், அப்போ கூதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது உக்கிரம் குப்பன் துறை பகுதியை சேர்ந்த நடுபழனி (75), கருப்பசாமி(40) மற்றும் வண்டி பாளையத்தை சேர்ந்த மருதாசலம்(46) ஆகிய மூன்று பேரும் தள்ளு வண்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.