தமிழ்நாட்டில் கடந்த மாதம் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. மேலும் தீவிரமாக மழை பெய்ததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு கடினமான சூழல் ஏற்பட்டது. எனவே அவர்களுக்கு வசதியாக மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக ஏதேனும் சனிக்கிழமை வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வரும் சனிக்கிழமை 03.12.2022 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், தொடர் பெருமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.